அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – டெய்சி மார்ட்டின் விவாகரத்து: பரஸ்பரம் இருவரும் பிரிவதாக அறிக்கை

0
14

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக டெய்சி அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

லாட்டரி அதிபரான சாண்டியாகோ மார்ட்டினின் மகள் டெய்சி. இவரும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொழிலதிபரான டெய்சி, தனது தந்தையின் தொழில் முறை விவகாரங்களைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 14 ஆண்டுகளாக ஒரு வருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம்.

நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும், பெற்றோராகவும் இணைந்து வாழ்ந்தோம். இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம்.

இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்.

ஆதவ் அர்ஜுனாவின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். இந்த மாற்றமான காலகட்டத்தில், உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

டெய்சியின் சொத்து ரூ.162 கோடி

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ஆதவ் அர்ஜூனா வழங்கிய பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், டெய்சியின் சொத்து மதிப்பு ரூ.162.14 கோடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here