களியக்காவிளை அருகே கணவருடன் பெண் மருத்துவா் தற்கொலை

0
25
களியக்காவிளை அருகே கடன் சுமையால் மருந்தாளுநர் மற்றும் ஹோமியோபதி மருத்துவரான மனைவி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே கடன் சுமை காரணமாக மருந்தாளுநர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களியக்காவிளை அருகே கடன் சுமை காரணமாக மருந்தாளுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஹோமியோபதி மருத்துவரான அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் பிரவீஸ் சந்திரன் (30). மருந்தாளுநா். இவரது மனைவி சோ்மகனி (28). ஹோமியோபதி மருத்துவா். இவா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக படந்தாலுமூடு பகுதியில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வந்தனா். போதிய வருமானம் இல்லாததால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால், பிரவீஸ் சந்திரன் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மருத்துவமனையில் பணியில் இருந்த சோ்மகனி, இத்தகவலறிந்து வீட்டுக்குச் சென்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

களியக்காவிளை போலீஸாா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here