திமுகவுடன் கூட்டணி வைப்பது ராஜீவுக்கு துரோகமாகிவிடாதா? – சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம்

0
28

2004-ம் ஆண்​டில் மக்​கள​வைத் தேர்​தலின்​போது திமுகவுடன் கூட்டணி வைத்​தால் அது ராஜீவ் காந்​திக்கு செய்த துரோக​மாகி​வி​டாதா என்று என்னை நானே அப்​போது கேட்​டுக்​கொண்​டேன் என்று காங்கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி தனது சுயசரிதை​யில் குறிப்​பிட்​டுள்​ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற பெயரில் சுயசரிதை எழு​தி​யுள்​ளார். சுயசரிதை​யில் சோனியா காந்தி எழுதி இருப்பதாவது: 2004-ம் ஆண்டு பாஜகவை எதிர்​கொள்​வதற்​காக ஒன்​றிணைய வேண்​டிய அனைத்து அரசி​யல் சக்​தி​களி​லும், தென்னிந்​தி​யா​வில் திமுக​தான் மிக முக்​கிய​மான கட்​சி​யாக இருந்​த​தால், அக்​கட்​சி​யுடன் தொடர்பு கொள்ள வேண்​டி​யிருந்​தது.

தமிழகத்​தைச் சேர்ந்த எங்​களது கட்சி மூத்த தலை​வர்​களில் சிலர் திமுக​வுடன் கூட்​டணி அமைக்க ஆர்​வ​மாக இருந்​தனர். 1991-ம் ஆண்டு தேர்​தலில், ராஜீவ் காந்​தி​யைக் கொன்ற எல்​டிடிஇ விடு​தலைப் புலிகள் அமைப்​பினருக்கு திமுக தொண்​டர்​கள் வெளிப்​படை​யாக ஆதரவு தெரி​வித்​திருந்​தனர். அந்​தக் கட்​சி​யைச் சேர்ந்த சிலர் ராஜீவுக்கு வெளிப்​படை​யாகவே மிரட்​டல் விடுத்​திருந்​தனர்.

ராஜீவ் படு​கொலை குறித்து விசா​ரிப்​ப​தற்​காக அமைக்​கப்​பட்ட ஜெயின் ஆணை​யம், தமிழ் கொலை​யாளி​களுக்கு திமுக தலைவர் மறை​முக​மாக ஆதர​வளித்​த​தாகக் குற்​றம்​சாட்டி தனது அறிக்கையை வெளி​யிட்​டபோது, 1997-ம் ஆண்டு அப்​போதையே பிரதமர் ஐ.கே. குஜ்​ரால் தலை​மையி​லான ஐக்​கிய முன்​னணி அரசுக்கு அளித்து வந்த ஆதர​வைக்​கூட காங்கிரஸ் வாபஸ் பெற்றிருந்​தது. அந்த வேதனை​யான நினை​வு​கள் மீண்​டும் என்னை வாட்​டத் தொடங்​கின. அப்​போது, “நான் என்ன செய்ய வேண்​டும்? அவர்​களு​டன்​(​தி​முக) கைகோத்​தால், அது ராஜீவ் காந்திக்​குச் செய்​யும் துரோக​மாகி​வி​டா​தா?” என்று என்னை நானே கேட்​டுக்​கொள்​வேன்.

மறு​புறம், “பாஜக​வுக்கு எதி​ரான நமது கூட்​ட​ணியை வலுப்​படுத்த அவசர​மாக முடி​வெடுக்க வேண்​டி​யிருந்​தது. திமுக​வுடன் பேச்​சு​வார்த்​தையைத் தொடங்க திமுக தலை​வர் கருணாநி​திக்கு நான் முதன் முதலாக தொலைபேசி​யில் அழைத்​த​போது, என் இதயம் படபடத்​துக் கொண்​டிருந்​தது. என் கைகள் நடுங்​கிக் கொண்டிருந்தன. எனக்​குத் தமிழ் தெரி​யாது. அவருக்கு ஆங்​கிலம் தெரி​யாது.

ஆனாலும், நான் தொலைபேசி​யில் பேசி​ய​போது அவர் அன்​பாகப் பதிலளித்​தார். அதன்​பிறகு நாங்​கள் நேரில் சந்​தித்​து, இரு கட்சிகளும் இணைந்து கூட்​ட​ணி​யாக செயல்​படு​வதற்கு அனைத்து நடவடிக்​கைகளை​யும் மேற்​கொண்​டோம். காலப்​போக்கில் கருணாநிதி மீது எனக்கு மரி​யாதை ஏற்​பட்​டது. கட்சியினருடன் கருத்து வேறு​பாடு​கள் ஏற்​படும்​போதெல்​லாம் நான் தலை​யிட வேண்​டி​யிருக்​கும். இறு​தி​யாக, 2004-ம் ஆண்டு மே 4-ம் தேதி, ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி (யுபிஏ) உரு​வானது. இவ்வாறு சுயசரிதை​யில் சோனியா காந்தி எழுதி உள்​ளார்.

டிகேஎஸ் இளங்​கோவன் பதில்

இதுகுறித்து திமுக மூத்த தலை​வர்​ டி.கே.எஸ். இளங்​கோவன் கூறும்​போது, “அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், ஒரு கட்டத்தில் எங்களுடன் வர வேண்டியிருந்தது. பிறகு திமுக தங்களோடு இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்பினார். பாஜகவை எதிர்க்க திமுக ஒரு வலுவான சக்தியாக இருக்கும் என்று அவர் கருதியதாலேயே நாங்கள் அவருடன் இருந்தோம். அதைத்தான் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் எங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர்களையே ஆதரித்தோம்” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here