காதலன் உயிரிழந்த 5 நாட்களில் சோகம்: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி – குழித்துறை அருகே பரபரப்பு!

0
44
குழித்துறை அருகே வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி அமிர்தா கிருஷ்ணன்
குழித்துறை அருகே கல்லூரி மாணவி வீட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் உயிரிழந்த சோகம்: வீட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவி – குழித்துறை அருகே பரிதாபம்!
குமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைத்தெருவைச் சேர்ந்த தொழிலாளி முருகனின் மகள் அமிர்தா கிருஷ்ணன் (பி.பி.ஏ. முதலாம் ஆண்டு) வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார்.
கேரள மாநிலம் மணக்காட்டைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படும் அமிர்தா கிருஷ்ணனும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
டியூஷனுக்கு வந்த மாணவர்கள் இதைக் கண்டு குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீசார் உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் கல்லூரி மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here