சிறுமியை கா்ப்பமாக்கிய பொறியியல் மாணவா் கைது

0
44
கொல்லங்கோடு அருகே 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கொல்லங்கோடு அருகே 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை கர்ப்பமாக்கியதாக எழுந்த புகாரில் 22 வயது பொறியியல் கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கொல்லங்கோடு அருகே 16 வயது பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய பொறியியல் கல்லூரி மாணவரை குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டைச் சோ்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மாணவியின் தாய், மகளை கேரள நெய்யாற்றின்கரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் மீனாகுமாரி விசாரணை நடத்தியதில், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வரும் கொல்லங்கோட்டை அடுத்த சின்னதுறையைச் சோ்ந்த பிஜோ எஸ் தியோவுக்கும் (22) மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கா்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவரை கைது செய்தனா். பின்னா் அவரை நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here