ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் பெண் உதவியாளரின் நாட்டியப் பள்ளியில் ஆவணங்கள் சிக்கின

0
20

ஜெம் வீரமணி போக்சோ வழக்​கில் அவரது பெண் உதவியாளரின் நாட்​டியப் பள்​ளி​யில் கட்​டுக்​கட்​டாக ஆவணங்​களை போலீ​ஸார் கைப்​பற்றி உள்​ளனர்.

வெளி​நாட்​டில் பதுங்​கிய தொழிற்​சங்​கத் தலை​வரின் மகனை கைது செய்​யும் நட​வடிக்​கையை சிறப்பு புலனாய்​வுக் குழு போலீ​ஸார் முடுக்கி விட்​டுள்​ளனர்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் கிரானைட்ஸ் நிறு​வன உரிமையாளர் வீரமணி கைது செய்​யப்​பட்​டார்.

அவரது குற்​றச் செயல்​களுக்கு உடந்​தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் உள்பட 7 பேர் கைது செய்​யப்​பட்டனர்.

வீரமணி மீது ஏற்​கெனவே 8 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், புதிதாக பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​கள் தொடர்​பாக கடந்த 28-ம் தேதி வீரமணி 3 வழக்​கு​களி​லும், சாந்தி, மகேந்​திர சிம்​மன், லாசர் ஆகியோர் தலா ஒரு வழக்​கிலும் கைது செய்​யப்​பட்​டு அனைவரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொளத்​தூரில் உள்ள கணேசனின் வீட்​டிலும், நீலாங்​கரையில் சாந்தி நடத்தி வந்த நாட்​டியப் பள்​ளி​யிலும் சிறப்பு புலனாய்வுக்

குழு போலீ​ஸார் சோதனை நடத்தி முக்​கிய ஆதா​ரங்​களை கைப்​பற்றி உள்​ளனர். வழக்​கில் தொடர்புடைய​வர்​கள் வெளி​நாடுகளுக்கு தப்​பிச் செல்​வதை தடுக்க லுக்-அவுட் நோட்​டீஸும் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, வீரமணி தனது குற்​றங்​களை மறைக்க முயற்​சித்​த​போது அவருக்கு சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகளை விற்​பனை செய்​ய​வும், அதன்​மூலமாக கிடைத்த தொகையில் பாலியல் வழக்கை மூடி மறைக்​கவும் உதவிய​தாக பிரபல ரயில்வே தொழிற்​சங்க மூத்த தலை​வரது மக​னான தொழிலதிபர் பிரகாஷ் மீதும் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​நிலை​யில், அவர் வெளி​நாடு தப்​பிச் சென்​றார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, இந்​தி​யா​வுக்கு அழைத்து வரும் நட​வடிக்​கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீ​ஸார் முடுக்கி விட்​டுள்​ளனர். இது​வரை 12 சிறுமிகளின் புகார்​கள் தொடர்​பாக விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here