கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகே புத்தன்சந்தை – இடைக்கோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேரூராட்சி வாகனம் மோதிய விபத்தில், மேல்பாலை எலவங்குடியைச் சேர்ந்த ஞானமுத்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














