ஃபிளை துபாய் விமான தாக்குதலை முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ அரசின் உயரிய விருது

0
23

ஃபிளை துபாய் விமான தாக்​குதல் சதியை சாமர்த்​தி​ய​மாக முறியடித்த இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்கு ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஃபிளை துபாய் விமானம் துபாயி​லிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்​குப் புறப்​பட்​டது.

இந்த விமானத்​தில், ஓமன் நாட்​டைச் சேர்ந்த துணை பைலட் திடீரென இந்​திய பைலட் கேப்​டன் ஸ்​மித் மச்​சார் மீது கோடாரியால் தாக்​குதல் நடத்​தினார். தலை மற்​றும் உடலின் பல்​வேறு பகுதி​களில் பலத்த காயமடைந்து மயக்க நிலைக்​குச் சென்ற நிலை​யிலும் கேப்​டன் ஸ்​மித் மச்​சார், தனது கடைசி முயற்​சி​யாகக் காக்​பிட் கதவைத் திறந்​தார்.

இத​னால் ஊழியர்​களும் பயணிகளும் உடனடி​யாகக் காக்பிட்டுக்குள் நுழைந்து தாக்​குதல் நடத்​தி​ய​வரை மடக்​கிப் பிடித்​தனர். இதனால் விமானம் பெரும் விபத்​தில் சிக்​கு​வதி​லிருந்து தப்​பியது. இந்த நிலை​யில், பலரின் உயிரை காப்​பாற்​றிய கேப்​டன் ஸ்​மித் மச்​சார் மற்​றும் விமானக் குழு​வினருக்கு யுஏஇ உயரிய சிவில் விருதான ‘ஃபர்​ஸ்ட் கிளாஸ் ஆர்​டர் ஆஃப் சயீத் II’ விருது வழங்கப்படும் என அறி​விக்​கப்​பட்​டது.

இதையடுத்து, இந்த விருதை ஸ்மித் மச்சாருக்கு துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரடியாக வழங்கி சிறப்பித்தார். ஐக்​கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பட்​டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆகிய இருஉயர் தலை​வர்​களும் விமானக் குழு​வினரை நேரில் சந்​தித்​துப் பாராட்​டுகளைத் தெரி​வித்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here