‘ஆபரேஷன் அல்மாஸ்’ மூலம் பாக். ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர்: பலூச் விடுதலை முன்னணி தகவல்

0
19

குவாதர் மற்​றும் அதைச் சுற்​றியுள்ள பகுதி​களில் நடத்​தப்​பட்ட ‘ஆபரேஷன் அல்​மாஸ்’ நட​வடிக்​கை​யில் பாகிஸ்தான் ராணுவம் மற்​றும் உளவுத்​துறையைச் சேர்ந்த 80-க்கும் மேற்​பட்​டோர் கொல்​லப்​பட்​ட​தாக பலூச் விடுதலை முன்னணி தெரி​வித்​துள்​ளது.

இது​தொடர்​பாக, பாகிஸ்தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் செயல்​பட்டு வரும் பிரி​வினைவாத அமைப்​பான பலூச் விடுதலை முன்​னணியின் செய்​தித் தொடர்​பாளர் மேஜர் குவாஹ்​ரம் கூறியிருப்​ப​தாவது: பாகிஸ்தானின் குவாதர் மற்​றும் அதைச் சுற்றியுள்ள பகுதி​களில் ‘ஆபரேஷன் அல்​மாஸ்’ என்ற பெயரில் நடத்​தப்​பட்ட நட​வடிக்​கை​யில் 80-க்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் ராணுவ வீரர்கள் மற்​றும் உளவுத்​துறைப் பணி​யாளர்​கள் கொல்லப்பட்டனர்.

இந்த நட​வடிக்கை அக். 22-ம் தேதி தொடங்​கியது. பாகிஸ்​தான் ராணுவ முகாம்​கள், உளவுத்​துறை அலு​வல​கங்​கள் மற்​றும் பாதுகாப்​புச் சாவடிகள் ஆகியவை குறிவைக்​கப்​பட்டு தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இந்​தத் தாக்​குதல்​களில் 12 கவச வாக​னங்​கள் மற்றும் பொருட்​களைக் கொண்டு செல்​லும் லாரி​கள் அழிக்கப்பட்டன. 2 கண்​காணிப்பு ட்​ரோன்​கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2 காவல் நிலை​யங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

குவாதரில் உள்ள எல்​லைப் பணிகள் அமைப்​பின் முக்​கிய முகாம் மற்​றும் கப்த், ரிம்​தான் பகுதி​களில் உள்ள ராணுவ நிலைகள் மீது எங்​கள் படை​யினர் தாக்​குதல் நடத்​தின. இந்​தத் தாக்​குதலின்​போது, முக்​கிய ராணுவ முகாம் 20 மணி நேரத்​துக்​கும் மேலாக எங்​கள் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் மற்​றும் பொருளாதா​ரத் திட்​டங்​கள் மீது தொடர்ந்து தாக்​குதல்​கள் நடத்​தப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது. எனினும், தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை, சேதமடைந்த வாக​னங்​கள் விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here