‘மணிகண்டா’ ஆனது ‘தத் த்​வம் அஸி’

0
21

ஆன்​மீகப் பின்​னணி​யில் ‘தத் த்​வம் அஸி’ என்ற பெயரில் உருவான படத்​தின் தலைப்பை ‘மணிகண்டா’ என்று மாற்றியுள்ளனர். இதில் வைபவ் கதாநாயகனாக நடித்​துள்​ளார். மீனாட்சி கோவிந்​த​ராஜன், அர​விந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெரேடி, அர்ஜய் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்​பில் ஜே.கே. சரவணா மற்​றும் எம். ராஜாராம் தயாரிக்​கின்​றனர். வெங்​கட் பிரபு இப்​படத்​தின் கிரியேட்​டிவ் புரொடியூசராகப் பணி​யாற்​றுகிறார். ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்​கர் இயக்​கு​கிறார். பிரேம் ஜி அமரன் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு யுவன் செல்வா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் முதல் தோற்​றத்தை நடிகர் ரவிமோகன் வெளி​யிட்​டுள்​ளார்.

“ஐயப்​ப பக்​தர்​களின் ஆன்​மீகப் பயணத்தை மைய​மாகக் கொண்டு இதன் கதை உரு​வாகி​யுள்​ளது. குடும்ப ரசிகர்​களைக் கவரும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்​படம், ‘காந்​தாரா’, ‘ஹனுமன் அன்ஸ்’, ‘கருப்பு’ போன்ற பக்தி மற்​றும் ஆன்​மீக அம்​சங்​கள் கலந்த படங்​களின் வரிசையில் ரசிகர்​களிடம் வரவேற்​பைப் பெறும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here