மது போதையில் தொடர்ந்து சித்திரவதை செய்த கணவரை, மனைவி மண்எண்ணெய் ஊற்றி எரித்துக் கொ***ற சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சங்கர் குரு (35). இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (32). மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் குரு, தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியையும் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக 2022-ல் விவாகரத்து பெற்ற இந்த தம்பதியினர், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
இருப்பினும் சங்கர் குருவின் சித்திரவதை தொடர்ந்ததால், அதிகாலையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சங்கரேஸ்வரி, கணவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வை****ர். உடலில் தீப்பற்றிய நிலையில் சமையலறைக்குள் ஓடிய சங்கர் குரு அங்குள்ள கேஸ் சிலிண்டர் மீது விழுந்ததால், சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் சங்கர் குருவின் வீடு உட்பட மொத்தம் 3 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தில் சங்கர் குரு பரிதாபமாக உயி****தார். இதையடுத்து, கணவரை எரி***கொ***ற சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














