உ.பி.யில் மானியம் பெற போலி திருமணங்கள்: 194 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவு

0
10

உத்​தர பிரதேசத்​தில் அரசு மானியம் பெறு​வதற்​காக போலி திருமணங்கள் நடை​பெற்​றது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டுள்​ளது. இது​தொடர்​பாக, 194 விண்​ணப்​பங்​கள் ரத்து செய்​யப்​பட்டு விசாரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

உத்​தர பிரதேச அரசு பொருளாதார ரீதி​யாக நலிந்த குடும்பங்களின் மகள்​களின் திரு​மணத்​துக்​காக ரூ.20,000 மானியம் வழங்​கு​கிறது. இதற்​காக, போலி திரு​மணங்​கள், உ.பி.யின் மைன்​புரி மாவட்​டத்​தில் நடை​பெற்​றுள்​ளன. இதில் மணமகள் அல்​லது மணமகன் இல்​லாமல் போலியான திரு​மண ஊர்​வலங்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. மூன்று கட்ட சரிபார்ப்​பு​களுக்​குப் பிறகு, சுமார் 194 விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​டன.

இந்த விண்​ணப்​ப​தா​ரர்​களில் பலர் போலியான திரு​மண அட்​டைகளை​யும், தவறான வரு​மானச் சான்​றிதழ்​களை​யும் சமர்ப்​பித்​துள்​ளனர். தற்​போது 125 விண்​ணப்​பங்​கள் சந்​தேகத்​தின் பேரில் விசா​ரணை​யில் உள்​ளன. இவர்​களில் 194 பேர் செய்த மோசடிகள் பல​வகைகளாக உள்​ளன.

உதா​ரண​மாக, தேவ்​புராவைச் சேர்ந்த ராகேஷ் என்​பவரது விண்​ணப்​பத்​தில் இணைக்​கப்​பட்​டிருந்த திரு​மண அட்டை போலியானது எனக் கண்​டறியப்​பட்​டது. உயர் அதி​காரி​களின் விசா​ரணை​யில், அவருக்கு ஏற்​கெனவே திரு​மணம் ஆகியிருந்ததும், அவர் மோசடி​யான வழிகளில் மானியத்​தைப் பெற முயன்றதும் தெரிய​வந்​தது.

இதேபோல், பர்​னஹாலைச் சேர்ந்த அசோக் குமார் மானியத்துக்காக ஒரு போலி வரு​மானச் சான்​றிதழை சமர்ப்பித்திருந்​தார். மொஹல்லா பக்​வானைச் சேர்ந்த அப்​சானா மற்​றும் தலிப்​பூரைச் சேர்ந்த ஷகீலா பேகம் ஆகியோர் சிறு​பான்​மையின​ராக இருந்​த​போதிலும், தவறான மானிய விண்​ணப்​பங்களைச் சமர்ப்​பித்​தனர்.

உ.பி. பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை​ புள்​ளி​விவரப்​படி, இந்த ஆண்டு திரு​மண மானிய திட்டத்தில் 909 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. இ்தில் செப்​டம்​பர் வரை, 552 பேருக்கு ரூ.1.10 கோடி மானிய​மாக வழங்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here