குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

0
22
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெத்தினராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு
விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட ரெத்தினராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அனந்த நாடாா்குடி, கீழச்சங்கரன்குழி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் முருகேசன் மகன் ரெத்தினராஜ் (28). இவா், விபசார வழக்கில் ஈத்தாமொழி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரை செய்ததன்பேரில், ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவின்படி, ரெத்தினராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here