சவுதி உடனான மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

0
18

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

சவுதி அரேபியா​வுடன் புதி​தாக செயல்பாட்டுக்கு வந்​துள்ள மெக்கா பாது​காப்பு ஒப்​பந்​தத்​தின் கீழ், ஏமனில் செயல்​படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்​களின் இலக்குகள் மீது பாகிஸ்​தான் விமானப் படை வான்வழித் தாக்​குதல்களை நடத்​தி​யுள்​ளது.

மேலும், சவுதி அரேபி​யா​வில் சுமார் 8,000 பாகிஸ்​தான் ராணுவ வீரர்​கள் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யாகி உள்ளன. மத்​திய கிழக்கு பிராந்​திய மோதலில் தற்​போது பாகிஸ்தானும் நேரடி​யாக களமிறங்​கி​யுள்​ளது. நியூ​யார்க் டைம்ஸ் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யின்​படி, சவுதி அரேபி​யா​வுக்கு வழங்​கப்​படும் ராணுவ ஆதரவை இஸ்​லா​மா​பாத் தீவிரப்படுத்தியுள்​ளது என பாகிஸ்​தான் மூத்த ராணுவ அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார். ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​களைக் குறி​வைத்து நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களில் பாகிஸ்​தான் போர் விமானங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டதை​யும் அவர் உறுதிப்படுத்தியுள்​ளார்.

இருப்​பினும், பாகிஸ்​தான் தகவல் தொடர்பு அமைச்​சகம் இந்த செய்​தியை மறுத்​துள்​ளதுடன், ஹவு​தி​களுக்கு எதி​ராகப் பாகிஸ்​தான் போர் விமானங்​கள் பயன்​படுத்​தப்​பட​வில்லை என்​றும் தெரி​வித்​துள்​ளது. அதே​நேரம், பாகிஸ்​தான் ராணுவ வீரர்​கள் ஏற்​கெனவே சவுதி அரேபி​யா​வில் தங்​கி​யிருப்​பதை சிஎன்​என் செய்தி நிறு​வனத்​திடம் பாகிஸ்​தான் ராணுவத்​தின் ஊடகப் பிரிவு தலை​வர் லெப்​டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சவுத்ரி உறு​திப்​படுத்​தி​யுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இருப்​பினும், பாது​காப்பு காரணங்​களுக்​காக வீரர்​களின் எண்​ணிக்கை குறித்த விவரங்​களை அவர் வெளி​யிட​வில்​லை.

இந்​தி​யர்​களுக்கு எச்​சரிக்கை

ரியா​த்தில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தற்​போது நிலவி வரும் பதற்​ற​மான சூழ்​நிலை​யைக் கருத்​தில் கொண்​டு, சவு​தி​யில் வசிக்​கும் இந்​தி​யர்​கள் அனை​வரும் மிகுந்த எச்​சரிக்​கை​யுட​னும் விழிப்​புட​னும் இருக்க வேண்​டும். தேவைப்​பட்​டால் வீடு​களுக்​குள்​ளேயே பாது​காப்​பாக இருக்க வேண்​டும்.

உள்​ளூர் அதி​காரி​கள் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடும் வழிகாட்டு​தல்​களைச் சரி​யாகப் பின்​பற்ற வேண்​டும். தற்​போதைய சம்​பவங்​கள் தொடர்​பான எந்​தவொரு வீடியோக்​கள் அல்​லது செய்​தி​களை​யும் சமூக வலை​தளங்​களில் பகிர​வோ, ரீபோஸ்ட்​ செய்​ய​வோ வேண்​டாம்​” என கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here