‘45 நிமிடம் போராடி மச்சாரின் ரத்தக்கசிவை கட்டுப்படுத்தினேன்’ – ஃபிளை துபாய் விமானத்தில் பயணித்த பல் மருத்துவர் தகவல்

0
17

ஃபிளை துபாய் விமானத்​தில் பயணம் செய்த ஜார்​ஜி​யா​வைச் சேர்ந்த பல் மருத்​து​வர் ஷோட்டா முசாயேவ் சுமார் 45 நிமிடங்​கள் இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்​பாற்​றி​னார்.

இதுகுறித்து ஷோட்டா முசாயேவ் தனி​யார் சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​திய பைலட் மச்​சா​ருக்கு தலை​யிலும் இடது கையிலும் கடுமை​யான ரத்​தக்​கசிவு இருந்​தது. காயங்களின் மீது அழுத்​தம் கொடுத்து ரத்​தக்​கசிவை கட்டுப்படுத்த முதலில் டி-ஷர்ட்​களை பயன்​படுத்​தினேன். ஒவ்வொரு முறை​யும் டி-ஷர்ட்டை அகற்றி காயத்​தைப் பார்த்​த​போது மீண்​டும் அதி​க​மாக ரத்​தம் வெளி​யேறியது.

எனவே மெது​வாக அழுத்​தம் கொடுத்​து, காயத்தில் ஐஸ் கட்​டிகள் வைத்து கவனித்​தேன். மச்​சார் மயக்​கமடை​யாமல் இருக்க அவருடன் தொடர்ந்து பேசினேன். அவர் என்​னிடம் ‘தய​வுசெய்து எனக்கு உதவுங்​கள். நான் இங்கே இறக்க விரும்​ப​வில்​லை’ என்று கூறி​னார். ஒரு கட்​டத்​தில் அவரது நாடித்​துடிப்பு மிக​வும் குறைந்தது. அதனால் அவரது கால்​களை உயர்த்தி வைத்​தேன். அதன் பிறகு நாடித்​துடிப்பு மீண்​டும் சீரானது.

மேலும் கவலைக்​குரிய ஒரு அறிகுறி​யாக மச்​சா​ரின் உதடு​கள் நீல நிற​மாக மாறின. அதைப் பார்த்​ததும், விமானப் பணி​யாளரிடம் ‘நாம் உடனடி​யாக தரை​யிறங்க வேண்​டும்’ என்று சொன்​னேன். மச்​சார் வலி நிவாரண மாத்​திரை கேட்​டார். அதற்கு நான் ஒப்​புக்​கொள்​ள​வில்​லை.

சுமார் 45 நிமிடங்​கள் மச்​சா​ரின் உடல்​நிலையை தொடர்ந்து கண்​காணித்​தேன். விமானம் தரை​யிறங்​கிய பிறகு மச்​சாரை அங்கிருந்த மருத்​து​வர்​களிடம் ஒப்​படைத்​தேன். ‘குட் லக், என் நண்பரே. எல்​லாம் நன்​றாக நடக்​கும்’ என்று நம்​பிக்கை வார்த்தைகளை கூறி அவரை அனுப்​பி வைத்​தேன்​. இவ்​வாறு ஷோட்​டா மு​சாயேவ்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here