குமரியில் தோழியுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது

0
20
இரணியல் அருகே பெண்ணை மிரட்டியதாக பள்ளி தோழன் கைது
இரணியல் அருகே தனிப்பட்ட வீடியோ மூலம் பெண்ணை மிரட்டியதாக புகார்; பள்ளி தோழன் அபிஷேக் கைது

இரணியல் அருகே கணவரை பிரிந்து வாழும் 28 வயது பெண்ணுடன் பழகி வந்த பள்ளி தோழன், அவருடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் பழகி வந்த பள்ளி தோழன் அபிஷேக் என்பவர், தனிமையில் இருந்த நேரத்தில் வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பெண் அபிஷேக்குடன் தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அபிஷேக், சம்பவத்தன்று தோழியுடன் தகராறு செய்தார். என்னுடன் பேச மாட்டாயா? என கேட்டு அவரின் தலை முடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இளம் பெண், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து, எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, நித்யா புகாரின் பேரில் அபிஷேக்கை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here