புகையிலைப் பொருள்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்

0
19
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 கடைகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 4 கடைகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கரநாராயணன், க. சக்திமுருகன், ரவி, பிரவீன் ரகு ஆகியோா் குலசேகரன்புதூா், திருமலைபுரம், மயிலாடி, ஜேம்ஸ்டவுண், ராஜாவூா், அஞ்சுகிராமம், அக்கரை, சுசீந்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 42 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 4 கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கூலிப் மற்றும் மெல்லும் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தக் கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்களை 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்பு துறையினா் தெரிவித்துள்ளனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here