குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில் – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமித் ஷா

0
24

குஜராத்தில் நாட்​டின் முதல் எல்என்ஜி ரயிலை மத்திய அமைச்​சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

குஜ​ராத் மாநில்ம் அகம​தா​பாத்தில் நேற்று நடை​பெற்ற விழா​வில், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ரூ.1,542 கோடி மதிப்பிலான ரயில்வே திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். அதன் ஒரு பகு​தி​யாக நாட்​டின் முதல் எல்​என்ஜி (திர​வ​மாக்​கப்​பட்ட எரிவா​யு) ரயிலை சபர்​மதி ரயில் நிலை​யத்​தில் இருந்து அவர் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்​திய ரயில்​வே​யில் தூய்​மை​யான மற்​றும் மாற்று எரிபொருட்களின் பயன்​பாட்டை ஊக்​குவிக்​க​வும், டீசல் பயன்​பாட்​டைக் குறைக்​க​வும் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முயற்​சிகளில் இத்​திட்​டம் ஒரு முக்​கிய மைல்​கல்.

இந்த ரயில் முழு​மை​யாக எல்என்​ஜி-யை மட்​டுமே நம்​பி​யிருக்​காது. இதன் இன்​ஜின், எல்​என்ஜி, டீசல் ஆகிய இரண்​டிலும் இயங்கும். எரிபொருள் இருப்பைப் பொறுத்து ரயி​லின் இன்​ஜின், எல்​என்ஜி மற்​றும் டீசலுக்கு இடையே மாறிக் கொள்​ளும். இதன் மூலம் எல்​என்ஜி கிடைக்​காத சூழலிலும் ரயில் சேவையைத் தடை​யின்றி தொடர முடி​யும்.

இந்த அமைப்​பின் கீழ், டீசல் பயன்​பாட்​டில் கிட்​டத்​தட்ட 40 சதவீதத்தை எல்​என்​ஜி-​யால் ஈடு​செய்ய முடி​யும். டீசல் பயன்​பாட்டை​யும் எரிபொருள் செல​வு​களை​யும் குறைப்​ப​தோடு, கார்பன் டை ஆக்​சைடு, நைட்​ரஜன் ஆக்​சைடு​கள் மற்​றும் மாசுதுகள்​கள் உள்​ளிட்ட வெளி​யேற்​றங்​களை​யும் குறைப்​பதை இந்த முயற்சி நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது. இந்த புதிய ரயிலுடன், கவச் தானி​யங்கி ரயில் பாது​காப்பு அமைப்​புக்​கும் அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here