2025-ம் ஆண்டில் எஸ்ஐஆர் பணியைத் தொடங்கியதிலிருந்து, 18 முதல் 28 வயதுக்குட்பட்ட 2.73 கோடி ஜென் ஸி இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 14-ல் 2021-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் மற்றும் பிரிவு 19-ன் படி, ஜனவரி1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி செய்யும் அல்லது ஏற்கெனவே 18 வயதை அடைந்த எந்த நபரும், எந்தவொரு திருத்தப் பணிக்காகவும் காத்திருக்காமல், வழக்கமான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடைமுறையின் கீழ் வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
எஸ்ஐஆர் காலகட்டத்திலும் 18-28 வயதுடையவர்களில் 2.73 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, இளம் வாக்காளர்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்றதற்கான சான்று. இவ்வாறு அவர்கள் கூறினர்.














