2035-க்​குள் இந்திய விண்வெளி நிலையம் அமையும்: சர்வதேச விண்​வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

0
18

வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்​கப்​படும். வரும் 2040-ம் ஆண்​டில் நில​வுக்கு இந்திய வீரர்​கள் செல்​வார்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று சர்வதேச விண்​வெளி உச்சி மாநாடு தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக உரையாற்​றி​னார்.

அவர் பேசி​ய​தாவது: உலகம் ஒரு குடும்​பம் என்ற உயரிய கொள்கையை இந்​தியா பின்​பற்​றுகிறது. உலகத்​தின் நன்மைக்காக விண்​வெளி துறை​யில் அனைத்து நாடு​களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்​டும். சர்​வ​தேச விதி​களுக்கு உட்பட்டு நடக்க வேண்​டும். விண்​வெளி துறை சார்ந்த ஆய்வுகளின் பலன்​கள் அனைத்து தரப்பு மக்​களுக்​கும் கிடைக்க வேண்​டும். இந்​தி​யா​வின் இஸ்ரோ நிறு​வனம் பல்​வேறு சாதனைகளை படைத்து வரு​கிறது.

மிகக் குறைந்த செல​வில் விண்​வெளி​யில் செயற்​கைக்​கோள்​களை நிலைநிறுத்​து​வ​தில் இஸ்ரோ முன்​னோடி​யாக திகழ்​கிறது. இந்த சாதனையை ஒட்​டுமொத்த உலக​மும் வியந்து பார்க்​கிறது. விவ​சா​யிகள், மீனவர்​களுக்கு தேவை​யான தகவல்​களை இஸ்ரோ வழங்​கு​கிறது. வானிலை முன்​னறி​விப்​பு​களை துல்​லிய​மாக வழங்​கு​கிறது. இயற்கை பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணிக்கு தேவை​யான உதவி​களை வழங்​கு​கிறது.

சுமார் 34 நாடு​களை சேர்ந்த 430-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​கோள்​கள் இந்​திய ராக்​கெட்​டு​களால் விண்​வெளி​யில் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன. இந்​தி​யா​வுக்கு மட்​டுமன்றி ஒட்​டுமொத்த உலகத்​தின் நன்​மைக்​காக இஸ்ரோ பணி​யாற்றி வரு​கிறது. சந்​திர​யான் 3 மூலம் நில​வின் தென்​துரு​வத்​தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெரு​மையை இந்​தியா பெற்​றிருக்​கிறது. இஸ்​ரோ​வின் ஆதித்யா எல் 1 மூலம் சூரியன் குறித்த ஆராய்ச்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. கடந்த 2025-ம் ஆண்​டில் இந்​திய விண்​வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்று சாதனை படைத்​தார்.

வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் விண்​வெளி​யில் இந்​திய விண்​வெளி நிலை​யம் அமைக்​கப்​படும். வரும் 2040-ம் ஆண்​டில் நில​வுக்கு இந்திய வீரர்​கள் பயணம் மேற்​கொள்​வார்​கள். இந்​தி​யா​வின் விண்​வெளி ஆய்​வு​கள் ஒட்​டுமொத்த மனித குலத்​துக்​கும் பயன் அளிப்​ப​தாக இருக்​கும். இந்​திய விண்​வெளி துறை​யில் தனி​யார் நிறு​வனங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்டு இருக்​கிறது. இதன்​மூலம் எங்​களது விண்​வெளி துறை அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது.

கடந்த 1960-ம் ஆண்​டில் கேரளத்​தின் தும்​பா​வில் இந்​தி​யா​வின் முதல் விண்​வெளி திட்​டம் தொடங்​கியது. அப்​போது முதலே எங்களது நம்​பக​மான பங்​கு​தா​ர​ராக பிரான்ஸ் விளங்​கு​கிறது. இப்​போது விண்​வெளி துறை​யில் இந்​தி​யா, பிரான்ஸ் நாடு​களுக்கு இடையி​லான ஒத்​துழைப்பு அதி​கரித்து இருக்​கிறது. விண்​வெளி துறை சார்ந்த திட்​டங்​களில் இந்​தி​யா​வோடு இணைந்து பிரான்​ஸும் இதர நாடு​களும் பயணிக்க அழைப்பு விடுக்​கிறேன். நாம் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். மனித குலத்​தின் நன்மைக்காக விண்​வெளியைப்​ பாது​காக்​க வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர் மோடி பேசினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here