ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 கிலோ மூட்டையாக அரிசி அனுப்பப்படுகிறது. அரிசி மூட்டைகள் பல இடங்களில் ஏற்றி இறக்கப்படுவதால் கடைக்கு வந்து சேரும்போது 3 கிலோ வரை குறைந்து 47 கிலோ அளவில் வந்து சோ்கிறது. இதனால், ரேஷன் கடை ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, இதைத் தவிா்க்க ரேஷன் பொருள்களை பொட்டலமாக வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். மேலும், ரேஷன் கடை ஊழியா்களுக்கு சிறப்புக் காப்பீடு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.















