‘டொனால்ட் ட்ரம்ப் திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ – ஸ்ரீதர் வேம்பு

0
21

அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார். அதை விமர்சிக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் டல்​லாஸ் நகரில் கடந்த புதன்கிழமை அன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் மாநாட்​டில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பேசுகை​யில், “வரும் நவம்​பர் மாதம் நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்​றால், உங்​களுக்​கும் வெற்றி நிச்​ச​யம். ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்​கும். இது ட்ரம்ப் ஈவுத்​தொகை என அழைக்​கப்​படும்.

வரும் இடைத்தேர்​தலில் வாக்​களிக்​கும் போது, வாக்​குச் சீட்​டில் எனது பெயர் இருப்​ப​தாகவே கரு​திக்​கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்​களி​யுங்​கள்” என்று தெரி​வித்​தார்.

இந்நிலையில், அதை ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார். ‘நாங்கள் இதைத் தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பினோம். ட்ரம்ப் தற்போது திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ என தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை சுட்டும் வகையில் ஸ்ரீதர் வேம்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here