பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்

0
8

கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் இரண்டு வீடு​களை வாங்​கி​யுள்​ளார்.

தின​மும் வீட்​டின் வெளியே அமர்ந்து அக்​கம் பக்​கத்​தினரின் பேச்சு​களை உற்​றுக் கவனிக்​கும் இவர், தகவல்​களின் உண்​மைத்​தன்​மையை உறு​திப்​படுத்த புகைப்​படங்​கள் மற்​றும் குறிப்புகளை உள்​ளடக்​கிய சிறப்பு ஆவணக் காப்​பகம் ஒன்றை தனது வீட்​டில் பராமரித்து வரு​கிறார்.

திரு​மணத்தை மீறிய உறவு, குடும்​பச் சண்​டைகள் போன்ற சுவாரசி​ய​மான உள்​ளூர் செய்​தி​களைத் தேவைப்​படு​வோருக்​குப் பணத்​திற்கு விற்று வரும் இவர், ஒரு​முறை நபர் ஒரு​வரின் ரகசி​யத்​தைக் காப்​ப​தற்​காக சுமார் 700,000 கொலம்​பிய பேசோக்​கள் (தோராய​மாக ரூ.21,073) வரை கட்​ட​ண​மாகப் பெற்​றுள்​ளார்.

இந்த வித்​தி​யாச​மான தொழில், தனது அன்​றாட செல​வு​களுக்கு உதவுவதோடு, இரண்டு வீடு​கள் வாங்​க​வும் தனக்கு உதவிய​தாக மிரி​யம் தெரிவிக்​கிறார். புரளியை விற்​ப​தன் மூலம் தான் சம்பாதிக்​கும் பணத்தை பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​தும் நாண​யங்​கள் மற்​றும் நோட்​டு​கள் நிரம்​பிய ஒரு பெரிய பணப் பெட்​டியை​யும் அவர் பார்​வை​யாளர்​களுக்​குக் காட்​டி​னார்.

‘கிசுகிசுக்​களின் ராணி’ தொடக்​கத்​தில் இவரது இந்​தச் செயலுக்கு எதிர்ப்பு கிளம்​பிய​போ​தி​லும், ‘கிசுகிசுக்​களின் ராணி’ என்று அழைக்​கப்​படும் மிரி​யம், தனது பல ஆண்டு கால அனுபவம் மற்றும் துல்​லிய​மான ஆதா​ரங்​கள் மூலம் இத்​தொழிலில் தொடர்ந்து வெற்​றிநடை போட்​டு வரு​கிறார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here