ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி!

0
13

ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்​மாநில அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. அதே​நேரம் அவர்​கள் மாலை 6 மணிக்​குள் சிறைக்கு திரும்ப வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் கைதிகள், தங்​கள் குடும்​பத்​தினரின் வாழ்​வாதரத்​துக்​காக பகல் நேரத்​தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்​து​விட்​டு, மாலை​யில் சிறைக்கு திரும்ப அம்​மாநில அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. விரை​வில் இந்த திட்​டம் அமலுக்கு வரும் என கூறப்​படு​கிறது.

ராஞ்​சி​யில் உள்ள பிர்சா முண்டா மத்​திய சிறை, ஹசா​ரி​பாகில் உள்ள ஜெய் பிர​காஷ் நாராயண் மத்​திய சிறை, கிழக்கு சிங்​பூமில் உள்ள ககிடிஹ் மத்​திய சிறை மற்​றும் தும்பா மத்​திய சிறை ஆகிய 4 மத்​திய சிறை​களில் உள்ள திறந்த மற்​றும் பகு​தி​யளவு திறந்த முகாம்​கள் மூலம் இந்த திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​படும். ஆனால் இத்​திட்​டம் அனைத்து கைதி​களுக்​கு​மானதல்ல. தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சில கைதி​களுக்கு மட்​டுமே இந்​தச் சலுகை வழங்​கப்​படும்.

சிறைத்​துறை ஐ.ஜி. சுதர்​ஷன் மண்​டல் கூறும்​போது, “திறந்த அல்லது பகு​தி​யளவு திறந்த கைதி​கள் தங்​கும் அறை அமைப்​பின் கீழ், கைதி​கள் காலை 6 அல்​லது 7 மணி​யள​வில் வெளியே சென்று வேலை செய்​து, தங்​கள் குடும்​பங்​களுக்​காகச் சம்​பா​தித்​து, சுமார் 12 மணி நேரத்​துக்​குப் பிறகு சிறைக்​குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்​கள். இந்த வசதி நகர்ப்​புற மையங்​களில் இருப்​ப​தால், கைதி​களுக்கு வாழ்​வா​தா​ரம் ஈட்ட நியாய​மான வாய்ப்பு கிடைக்​கும்.

இந்​தத் திட்​டத்​துக்கு தகு​தி​யானவர்​களை தீர்​மானிக்க, ஒரு நிலையான செயல்​பாட்டு நடை​முறை வகுக்​கப்​படும். நன்னடத்தை மற்​றும் சிறை விதி​களைக் கடைப்​பிடித்​தல் ஆகியவை முக்​கி​யத் தகுதி அளவு​கோல்​களில் அடங்​கும்” என்​றார்.

இதுகுறித்து அரசின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “கைதிகள் வெளி​யில் சென்று பணிபுரிய அனு​ம​திக்​கும் திட்டத்துக்கு மாநில அமைச்​சரவை சமீபத்​தில் ஒப்​புதல் அளித்தது. இது, சிறை​களில் சீர்​திருத்​தங்​களை வலுப்​படுத்​த​வும், கைதி​கள் மீண்​டும் சமூகத்​தில் ஒருங்​கிணைவதற்கு உதவ​வும் மாநில அரசு மேற்​கொள்​ளும் முயற்​சிகளின்​ ஒரு பகு​தி​யாகும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here