“நண்​பரை கணவ​ராக தேர்ந்தெடுப்பதே சிறந்தது” – எமி ஜாக்சன் கருத்து

0
18

நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மத​ராசப்​பட்​டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இந்தி மற்​றும் தெலுங்கிலும் நடித்​துள்ள அவர், ‘சூப்​பர்​கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்​காட்​சித் தொடரிலும் நடித்​திருக்​கிறார். இவர் ஜார்ஜ் என்​பவரை காதலித்​தார்.

2019-ம் ஆண்​டில் அவர்​களுக்கு நிச்​சய​தார்த்​தம் நடந்​தது. ஆண் குழந்​தை​யும் பிறந்​தது. சில காரணங்​களால் 2021-ல் பிரிந்​தனர். இதைத் தொடர்ந்​து, ஆங்​கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்​தாலி​யில் திரு​மணம் செய்​து​கொண்​டார். 2025-ம் ஆண்​டில் இவர்​களுக்கு ஆஸ்​கர் அலெக்​ஸாண்​டர் என்ற ஆண் குழந்தை பிறந்​தது.

இந்​நிலை​யில் தனது 2-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் எமி ஜாக்சன். அதுபற்றி அவர் கூறும்​போது, “நெருங்​கிய நண்​பரையே வாழ்க்​கைத் துணை​யாகத் தேர்ந்தெடுப்​பது​தான் சிறந்தது என்​பது இப்​போது புரி​கிறது. அன்பு, குழந்தை கள், சாகசங்​கள், சற்று குழப்​ப​மான முடிவு​கள், அளவு​கடந்த மகிழ்ச்சி என இந்த 2 ஆண்​டு​கள் கடந்​திருக்​கின்​றன. இந்த வாழ்க்​கையை வேறு யாருட​னும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்​டேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here