“எங்களை நோக்கி எழும் கேள்விகளுக்கு ஆக.15-ல் பதிலடி கொடுப்போம்” – பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

0
20

இந்​திய கிரிக்​கெட் அணி இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்​கு​கிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யில் இந்​திய அணி கடந்த ஆண்டு டிசம்​பரில் சொந்த மண்​ணில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்​கில் இழந்த நிலை​யில் தற்​போது இலங்கை அணியை எதிர்​கொள்ள உள்​ளது.

இலங்கை தொடருக்​கான இந்​திய அணி​யில் சுழற்​பந்து வீச்​சாள​ரான மத்​திய பிரதேசத்தை சேர்ந்த சரண்ஷ் ஜெயின், ஜம்​மு&​காஷ்மீரை சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான அகிப் நபி ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில் இந்​திய அணி வீரர்​கள் நேற்று வலை பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர். முன்​ன​தாக பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் இந்​திய கிரிக்​கெட் அணியின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறியதாவது:

எங்​கள் கண்​முன்னே என்ன இருக்​கிறது என்​பது எங்​களுக்கு தெரியும், நாங்​கள் எதற்​காக விளை​யாடு​கிறோம் என்​பதும் எங்​களுக்கு தெரி​யும். எங்​களால் கடின உழைப்​பைக் கொடுக்க முடி​யும், எல்​லைகளை தாண்டி செயல்பட முடி​யும், அணி​யின் அனைத்​துத் தேவை​களை​யும் முழு​மை​யாகப் பூர்த்தி செய்​ய​வும் முடி​யும்.

ஆகஸ்ட் 15-ம் தேதி காலை முதல் டெஸ்ட் போட்டி தொடங்​கும்​போது, நாங்​கள் முதலில் பேட்​டிங் செய்​தா​லும் சரி, அல்​லது பந்​து​வீச்சு செய்​தா​லும் சரி, எங்​களிடம் வீசப்​படும் ஒவ்​வொரு கேள்விக்​கும், ஒவ்​வொரு சவாலுக்​கும் பதிலளிக்க நாங்​கள் முழு​மை​யாகத் தயா​ராக இருக்​கிறோம்.

அணி​யில் புதிய வீரர்​கள் இணைந்​திருக்​கிறார்​கள். முதலா​வ​தாக, சரண்ஷ் ஜெயினுக்கு வாழ்த்​துகள். இங்கு வரு​வதற்கு அவர், கடின​மாக உழைத்​துள்​ளார். எப்​போது வாய்ப்பு கிடைத்​தா​லும் அதை உங்​கள் குடும்​பத்​துக்​காக​வும், நாட்​டுக்கு பெருமை சேர்க்​கும் வகை​யிலும் பயன்​படுத்​துங்​கள்.

இரண்​டாவ​தாக, அகிப் நபிக்கு வாழ்த்​துகளைத் தெரிவிக்க விரும்பு​கிறேன். கடந்த சீசன் அவருக்கு அற்​புத​மாக அமைந்​தது, ஜம்மு & காஷ்மீருக்கு ரஞ்​சிக் கோப்​பையை வென்று கொடுத்​துள்ளார். இது மிகப்​பெரிய சாதனை​யாகும். அவருக்கு மீண்​டும் ஒரு​முறை வாழ்த்​துகள்​. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here