ஆகஸ்ட் 4 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நடத்தும் ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 10-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த சீசனின் முதல்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கலிலும், இறுதிக்கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்றும், சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்டுகளுக்கு(லோயர்) ரூ.100 என்றும், சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்டுகளுக்கு(அப்பர்) ரூ.150 என்றும், கேஎம்கே டெரஸ் பகுதிக்கு ரூ.300 என்றும், கேஎம்கே லோயர் பகுதிக்கு ரூ.500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.















