ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து கடந்த ஆண்டு கைப்பற்றியிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டிக்குமான மைதானத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, இங்கிலாந்து வாரியத்திடமே உள்ளது. இதுவரை நடைபெற்ற 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்திலேயே நடைபெற்று இருந்தது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா (87.50%) முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா (75%), நியூஸிலாந்து (72.22%), வங்கதேசம் (58.33%), இந்தியா (48.15%), இலங்கை (41.67%), இங்கிலாந்து (24.36%), மேற்கு இந்தியத் தீவுகள் (15%), பாகிஸ்தான் (8.33%) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 9-வது இடங்களில் உள்ளன.















