சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொருட்காட்சிகளில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

0
19

சந்​தைகள், சுற்​றுலா தலங்​கள், பொருட்​காட்​சிகள், பொது இடங்​களில் ரசாயன நிறமூட்​டிகளைப் பயன்​படுத்தி தயாரிக்​கப்​படும் கலர் அப்​பளங்​கள் விற்​பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்​ளது.

தமிழகத்​தில் பல்​வேறு சுற்​றுலா தலங்​கள், பொருட்​காட்​சிகளில் குழந்​தைகளைக் கவரும் வகை​யில் வித​வித​மான வண்​ணங்​களில் விற்​கப்​படும் கலர் அப்​பளங்​களில் தடைசெய்​யப்​பட்ட ரசாயன நிறமூட்​டிகள் பயன்​படுத்​தப்​படு​வ​தாக தொடர்ச்​சி​யாக புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்​து, உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் பல இடங்​களில் சோதனை மேற்​கொண்டு மாதிரி​களை சேகரித்​தனர். ஆய்​வகங்​களில் அவற்றை பரிசோதனை செய்​த​தில், பெரும்​பாலான கலர் அப்பள மாதிரி​கள் பாது​காப்​பற்​றவை என கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உணவு பாது​காப்​புத் துறை வெளி​யிட்ட உத்​தர​வு: நிறம் சேர்க்​கப்​பட்ட அப்​பளம், வடாம் ஆகிய​வற்றை அடிக்​கடி சாப்​பிட்​டால் புற்​று​நோய் வரு​வதற்​கும் வாய்ப்பு உள்​ளது. செயற்கை நிறமிகள் பயன்​படுத்​தப்​படும் உணவுப் பொருட்​களை நீண்ட காலம் உட்​கொள்​வ​தால் புற்​று​நோய் கட்​டிகள் ஏற்​படும் அபா​யம் கணிச​மாக அதி​கரிக்​கிறது.

இவை செரி​மான மண்​டலத்தை பாதித்​து, வயிற்​றுப் புண், குடல் பாதிப்​பு​களை உண்​டாக்​கு​கின்​றன. தரம் குறைந்த இந்த ரசாயனங்​கள் உடலில் இருந்து எளி​தில் வெளி​யேறாமல் கல்​லீரல், சிறுநீரகங்​களில் தங்​கி, அவற்​றின் செயல்​பாட்டை பாதிக்​கின்​றன. குழந்​தைகளுக்கு அலர்ஜி, கவனச் சிதறலை உண்​டாக்​கும் ஆபத்​தும் உள்​ளது.

எனவே, மக்​கள் அதி​கம் கூடும் பொது இடங்​களான வாராந்​திர சந்​தைகள், புகழ்​பெற்ற சுற்​றுலா தலங்​கள், பொருட்​காட்சி வளாகங்​களில் கலர் அப்​பளங்​களை விற்​பனை செய்​யக்​கூ​டாது. தயாரிப்​பாளர்​கள், வியா​பாரி​களுக்​கும் இந்த உத்​தரவு பொருந்​தும். விதி​களுக்​குப் புறம்​பாக நிறமூட்​டிகளைப் பயன்​படுத்தி அப்​பளம் தயாரித்​து, விற்​றால் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்.

பெற்​றோரும் குழந்​தைகளுக்கு கலர் அப்​பளங்​களை வாங்​கித் தரவேண்​டாம். செயற்கை நிறம் சேர்க்​கப்​பட்ட அப்​பளங்​களை தவிர்த்​து, இயற்​கை​யான முறை​யில் உளுந்​து, அரிசி​யைப் பயன்​படுத்தி தயாரிக்​கப்​படும் அப்​பளத்தை வாங்கி பயன்​படுத்​தலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here