நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவகங்கள் தங்கள் சமையல் அடுப்புகள் மற்றும் பொருட்களை பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக கடைக்கு வெளியே வைக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் மாநகராட்சியின் 9487038 984 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.















