மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

0
17

மத்​திய அரசின் அனைத்து துறை செயலர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் நேற்று முக்​கிய ஆலோசனை நடத்​தி​னார்.

கடந்த நிதி​யாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்​தது. நடப்​பாண்​டில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையி​லான காலத்​தில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி தலைமை​யில் மத்​திய அரசின் அனைத்து துறை செய​லா​ளர்​கள் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கேபினட் செயலா​ளர் சோம​நாதன், பிரதமர் மோடி​யின் முதன்மை செயலாளர்​கள் பி.கே.மிஸ்​ரா, சக்​தி ​காந்த தாஸ் மற்​றும் 54 துறைகளின் செய​லா​ளர்​கள் பங்​கேற்​றனர்.

அப்​போது தங்​கள் துறை​யின் வளர்ச்சி சார்ந்த அறிக்​கைகளை பிரதமர் மோடி​யிடம் செய​லா​ளர்​கள் சமர்ப்​பித்​தனர். நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி, அந்​தந்த துறை​களின் வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். தொழில் தொடங்க ஏது​வான சூழலை உரு​வாக்​கு​வது, மக்​களின் வாழ்க்கை சூழலை மேம்​படுத்​து​வது, டிஜிட்​டல் நிர்​வாகத்தை விரிவுபடுத்​து​வது, மத்திய அரசின் திட்​டங்​கள் கடைநிலை மக்​களுக்​கும் சென்றடைவது, பொருளா​தார சீர்​திருத்​தங்​கள் குறித்து கூட்டத்தில் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

வரும் 2047ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உருவாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த லட்சியத்தை எட்ட மத்​திய அரசின் அனைத்து துறை​களின் செயலா​ளர்​களும் கடின​மாக உழைக்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுரை வழங்​கி​னார். அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து பாதிக்கப்​பட்டு உலக நாடு​கள் பெரும் சவால்​களை சந்​தித்​தன. இந்த பிரச்​சினையை இந்​தியா திறம்பட கையாண்​டது. மேற்காசிய போரால் ஏற்​பட்ட பாதிப்​பு​களில் இருந்து விரை​வாக மீண்​டெழு​வது குறித்து மூத்த அதி​காரி​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​தாலோ​சித்​தார்.

மத்​திய அமைச்​சரவை மாற்​றம் ?: மத்​திய அமைச்​சரவை விரைவில் மாற்​றம் செய்​யப்​படும் என்​றும் தற்​போதைய மத்​திய அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றிருக்​கும் 6 அமைச்​சர்​கள் நீக்கப்பட்​டு, புதிய அமைச்​சர்​கள் நியமிக்​கப்​படு​வார்​கள் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. குறிப்​பாக பிரதமரின் முதன்மை செய​லா​ளர்​களில் ஒரு​வ​ரான சக்தி காந்த தாஸ் அமைச்​சர​வை​யில் இடம்​பெறக்​கூடும்.

ஆம் ஆத்​மி​யில் இருந்து பாஜக​வில் இணைந்த ராகவ் சத்​தா, மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் மகன் ஸ்ரீ​காந்த், பாஜக மூத்த தலை​வர்​கள் தருண் சக், வி.டி.சர்​மா, அனு​ராக் தாக்குர் உள்​ளிட்​டோர் அமைச்​சர​வை​யில் சேர்க்​கப் ​படலாம் என்று கூறப்​படு​கிறது. இந்த சூழலில் மத்​திய அரசின் அனைத்து துறை​களின் செயலர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி ஆலோசனை நடத்​தி​யிருப்​பது முக்​கி​யத்​து​வம்​ பெற்​றிருக்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here