அயர்லாந்து அணிக்கு எதிரான தோல்வியை நம்ப முடியவில்லை: இந்திய அணியின் துணை பயிற்சியாளர் வேதனை

0
20

அயர்லாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 153 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது.

முதல் டி20 போட்​டி​யில் இந்திய அணியை 34 ரன்​கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வென்​றிருந்​தது. இதன் வாயிலாக 2 போட்​டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என கைப்​பற்றி கோப்​பையை வென்று சாதனை படைத்தது. இந்​திய அணிக்கு எதி​ராக இருதரப்பு டி20 தொடரை அயர்லாந்து அணி வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும்.

போட்டி முடிவடைந்​ததும் இந்திய அணி​யின் துணை பயிற்சியாளரான ரேயான் டென் டஸ்​ஷேட் கூறிய​தாவது: இந்த தோல்வியை​ எங்​களால் இன்​னும் நம்ப முடிய​வில்​லை. நாங்​கள் உலகக் கோப்பை தொடரை இப்​போது​தான் வென்​றிருக்​கிறோம். தங்​களது அடிப்​படை ஆட்​டத்தை வெளிப்​படுத்​திய அணி​யிடம் நாங்​கள் தோல்வி அடைந்​துள்​ளோம். வெற்றி பெற்ற அயர்​லாந்து அணிக்கு பாராட்​டு​கள்.

இந்த தொடரில் இருந்து மாறு​பட்ட ஆடு​களச் சூழல்​களுக்​கும், வெவ்​வேறு அணி​களுக்​கும் ஏற்ப எவ்​வாறு தகவ​மைத்​துக் கொள்ள வேண்​டும் என்​பதை கற்​றுக்​கொண்​டுள்​ளோம். இங்​குள்ள ஆடுகளச் சூழல், பலத்த காற்று பெரிய விஷய​மாக இருந்​தது, ஆனால் இவற்றை தோல்விக்​கான காரணங்​களாக சொல்ல முடியாது. வெவ்​வேறு சவால்​களுக்கு வேறு​பட்ட முறை​யில் தீர்வுகளைக் கண்​டறிய வேண்​டும்.

அயர்லாந்து அணி தங்​களது அடிப்​படை ஆட்​டத்தை சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யது. அதை எங்​களால் முறியடிக்க முடிய​வில்​லை. நாங்​கள் சிக்​ஸர்​களை மிக​வும் எளி​தாக அடிக்​கக்​கூடிய அதிவேக ஆட்ட முறைக்கு பழகி​விட்​டோம். அதனால் இது​போன்ற ஆடு​களச் சூழல்​களில் சற்று சாதுரிய​மாக செயல்பட வேண்​டும்.

அயர்லாந்து அணி வீரர்கள் பந்​து​வீச்​சில் அற்​புத​மாகச் செயல்பட்டனர். அவர்​களு​டைய பந்​து​வீச்​சாளர்​கள் ஓவருக்கு ஏழு ரன்​களுக்​கும் குறை​வாகவே விட்​டுக்​கொடுத்​தனர். அதிலிருந்​தும் நாங்​கள் கற்​றுக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here