சபர்​மதி ஆற்றில் மூழ்கி பெண் இறந்த சம்பவத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கணவர் கைது

0
22

 குஜ​ராத்​ மாநிலம் அகம​தா​பாத்தைச் சேர்ந்​த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்​திரை திரு​விழா நாளில் தனது மனைவி கோமல்​பென் சோலங்கியை ஊர் சுற்​றிக் காட்​டு​வ​தாகக் கூறி வெளியே அழைத்துச் சென்​றுள்​ளார்.

நள்​ளிர​வில் மனை​வியை சபர்​மதி ஆற்​றங்​கரைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். அங்கு இரு​வரும் பேசிக் ​கொண்​டிருந்​த ​போது, எதிர்​பா​ராத நேரத்​தில் மனை​வியை தூக்கி ஆற்​றில் வீசி​யுள்​ளார். பிறகு அங்​கிருந்து தப்​பிய மினேஷ் மறு​நாள் கலுபூர் காவல் நிலையம் சென்று தனது மனை​வியை காண​வில்லை என்று ஒரு பொய் புகாரைப் பதிவு செய்​துள்​ளார்.

சில மணி நேரத்​துக்கு பிறகு கோமல்​பென் உடல் கண்டெடுக்கப்பட்​ட ​போது, அது விபத்​தால் ஏற்​பட்ட மரணம் என்றே வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் சமீபத்​தில் கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், அகம​தா​பாத் போலீஸார் இந்த வழக்​கின் தொழில் ​நுட்​பத் தரவு​கள் மற்​றும் பழைய சாட்​சிகளின் வாக்​கு மூலங்​களை மறு ஆய்வு செய்​தனர்.

இந்த விசா​ரணை​யின் ​போது, திரு​மண​மான நான்கே மாதங்களில் ஏற்​பட்ட குடும்​பத் தகராறு காரண​மாக மினேஷ் இந்த கொடூரக் குற்​றத்தை செய்​தது அம்​பல​மானது. இதையடுத்து மினேஷை போலீ​ஸார் கைது செய்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here