கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

0
20

பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: நாடு முழு​வதும் புற்​று​நோய் சிகிச்​சைக்கு கீமோதெரபி மருந்​துகளான சிஸ்​பிளாட்​டின் மற்​றும் கார்​போபிளாட்​டின் ஆகிய​வற்​றிற்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருப்​பது கவலைக்​குரிய ஒன்​றாகும்.

இந்த தட்​டுப்​பாட்டை சமாளிப்​ப​தற்​காக, மருந்து தயாரிப்பு நிறு​வனங்​களுக்கு விலை உயர்​வுக்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​ யிருப்​பது, மருந்து தட்​டுப்​பாடு என்​பது உண்​மை​யான பிரச்​சினை என்​பதை அரசே ஒப்​புக்​கொண்​டிருப்​பதை காட்​டுகிறது.

இந்​தி​யா​வில் ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான மக்​கள் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர். அவர்​களில் பெரும்​பாலானோர் அரசு மருத்​ து​வ​மனை​களையே நம்பி சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பல குடும்​பங்​கள் சிகிச்சை செல​வு​களால் கடன் சுமை​யில் சிக்​கு​கின்​றன.

இந்​நிலை​யில், கீமோதெரபி மருந்​துகளின் விலை உயர்வு நோயாளி​களுக்​கும், அவர்​களது குடும்​பங்​களுக்​கும் கூடு​தல் பொருளா​தார சுமையை ஏற்​படுத்​தும்.

புற்​று​நோய் என்​பது ஒரு குடும்​பத்​தின் பொருளா​தா​ரத்​தை​யும், மன நிலை​யை​யும் கடுமை​யாக பாதிக்​கும் நோயாகும்.

எனவே, ஏழை மக்​களுக்கு சிகிச்சை பாதிக்​கப்​ப​டாத வகை​யில், கீமோதெரபி மருந்​துகள் எளி​தில் கிடைக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here