ஈரான் போரை நிறுத்த வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

0
27

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடங்​கியது. பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. எனினும் தற்​காப்பு தாக்​குதல் என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்​வப்​போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன.

இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்கா நாடாளு​மன்​றத்​தின் பிர​தி​நி​தி​கள் அவை​யில் ஐனநாயக கட்சி சார்​பில் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டது. இந்த தீர்​மானத்​தின் மீது நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. ஆதர​வாக 215 எம்​பிக்​களும், எதி​ராக 208 எம்​பிக்​களும் வாக்​களித்​தனர். பெரும்​பான்மை எம்​.பி.க்​களின் ஆதர​வால் தீர்​மானம் நிறைவேற்றப்​பட்​டது. குறிப்​பாக ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த 4 எம்​.பி.க்​கள் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களித்து உள்ளனர்.

இந்த தீர்​மானத்​தின் மீது செனட் அவை​யில் விரை​வில் வாக்கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. மொத்​த​முள்ள 100 எம்​பிக்களில் ஆளும் குடியரசு கட்​சிக்கு 53 எம்​பிக்​கள் உள்​ளனர். ஜனநாயக கட்​சிக்கு 45 எம்​பிக்​கள் மட்​டுமே உள்​ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவை​யிலும் ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த சில எம்​பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கக்​கூடும் என்று கூறப்​படு​கிறது.

ஒரு​வேளை செனட் அவை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதி​காரத்தைப் பயன்​படுத்தி தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யும். இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் நிருபர்​களிடம் கூறும்​போது, “அமெரிக்​கா, ஈரான் இடையி​லான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. விரைவில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்றார்.

ஈரான் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறும்​போது, “லெப​னான் மீதான தாக்​குதல் காரண​மாக அமெரிக்​கா, ஈரான் இடையி​லான பேச்​சு​வார்த்தை தடைபட்டுள்​ளது. லெபனான் மீதான தாக்​குதலை நிறுத்​தி​னால் மட்​டுமே பேச்​சு​வார்த்தை தொடரும்” என்றார்.

போர் நிறுத்தம்

லெப​னானை சேர்ந்த ஹிஸ்​புல்லா அமைப்​புக்கு எதி​ராக இஸ்​ரேல் ராணுவம் தொடர் தாக்​குதல்​களை நடத்தி வந்​தது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கண்​டிப்பு காரண​மாக இஸ்​ரேல், லெப​னான் இடையே கடந்த சில நாட்​களாக அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. அப்​போது போர் நிறுத்​தத்தை மீண்​டும் அமல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. எனினும் லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here