நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தை அடுத்து புனேவில் உள்ள ‘விப்ரோ’ அலுவலகத்திலும் மதமாற்ற முயற்சி

0
20

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் செயல்​படும் டிசிஎஸ் நிறுவனத்​தில் பெண் ஊழியர்​களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்​ததும் அவர்​களை கட்​டாய மத மாற்​றம் செய்ததும் கடந்த ஏப்​ரலில் வெளிச்​சத்​துக்கு வந்​தது. இதுதொடர்பாக 8 டிசிஎஸ் ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

டிசிஎஸ் நிறு​வனத்​தைப் போன்று மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரில் செயல்​படும் விப்ரோ நிறு​வனத்​தி​லும் மதமாற்ற முயற்சி நடை​பெற்​றிருப்​பது தற்​போது அம்​பல​மாகி உள்​ளது. இதுதொடர்​பாக முன்​னாள் பெண் ஊழியர் ஒரு​வர் புனே​வில் நேற்று முன்​தினம் நிருபர்​களிடம் கூறிய​தாவது: நான் இந்து மதத்தை சேர்ந்​தவள். புனே​வில் உள்ள விப்​ரோ​வில் பணி​யாற்​றி​யபோது ஷகீனா ரபீக் அறி​முக​மா​னார்.

இந்து மதத்​தில் இருந்து விலகி முஸ்​லிம் மதத்​துக்கு மாறு​மாறு அவர் வலி​யுறுத்​தி​னார். ஷேக் என்​பவருடன் நெருங்கி பழகுமாறு தொடர்ந்து வற்​புறுத்தி வந்​தார். முஸ்​லிம் மதத்துக்கு மாறி​னால் துபா​யில் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று ஆசை​வார்த்​தைகளை கூறி​னார்.

இந்த விவ​காரம் குறித்து விப்ரோ உயர​தி​காரி​களிடம் முறையிட்டேன். ஆனால் அவர்​கள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்கவில்​லை. ஷகீ​னா​வுக்கு ஆதர​வாக செயல்​பட்ட அதிகாரிகள் என்னை பழி​வாங்க தொடங்​கினர். கடந்த ஆண்டு ஆகஸ்​டில் என்னை வலுக்​கட்​டாய​மாக ராஜி​னாமா செய்ய வைத்தனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக விப்ரோ நிறு​வனம் எழுத்துப்பூர்வமாக மன்​னிப்பு கோர வேண்​டும். ஷகீ​னா​வுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். என்னை மீண்​டும் பணி​யில் சேர்த்துக் கொள்ள வேண்​டும். எனக்கு ஏற்​பட்ட மன உளைச்சலுக்கு விப்ரோ நிறு​வனம் ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக போலீஸ் நிலையத்தி​லும் புகார் அளித்​துள்​ளார்.

விப்ரோ விளக்​கம்

இதுகுறித்து விப்ரோ நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கையில், “இந்த விவ​காரம் குறித்த போலீ​ஸாரின் விசா​ரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். வழக்கு விசா​ரணை​யில் இருப்ப​தால் எந்த கருத்​தும் தெரிவிக்க விரும்​ப​வில்​லை. ஊழியர்களின் பாது​காப்​பு, சுயமரி​யாதைக்கு நாங்​கள் முன்னுரிமை அளித்​து வருகிறோம்​” எனக் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here