நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜைகளில் பங்கேற்றனர்.















