காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

0
19

காலி மது பாட்​டில் திரும்​பப்பெறும் திட்​டத்தை எதிர்த்​து, டாஸ்மாக் பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழகம் முழு​வதும் காலி மது பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை செயல்​படுத்த உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, தற்​போது, பெரும்​பாலான மாவட்​டங்​களில் இந்த திட்​டம் செயல்​பாட்​டில் உள்​ளது.

இந்த திட்​டத்​தின்படி, டாஸ்​மாக் கடைகளில் மது வாங்​கும் போது, கூடு​தலாக ரூ.10 கொடுக்க வேண்​டும். காலி மது பாட்​டிலை அதே கடை​யில் மீண்​டும் கொடுக்​கும் போது அந்த ரூ.10 திருப்பி தரப்​படும். சென்னை மண்​டலத்​துக்​கு உட்​பட்ட மாவட்​டங்​களில் இந்த திட்​டத்தை செயல்​படுத்த கடந்த பிப்​ர​வரி மாதம் உத்​தர​விடப்​பட்​டது.

இதற்​கிடையே, டாஸ்​மாக் பணி​யாளர்​களைக் கொண்டு இந்த திட்​டத்தை செயல்​படுத்​தக் கூடாது என போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த திட்​டத்தை செயல்​படுத்த தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​ப​தாக​வும், அதற்கு பின் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் எனவும், அப்​போது இருந்த அதி​காரி​கள் உறுதி அளித்​தனர்.

இந்​நிலை​யில், தற்​போது காலி மது பாட்​டில் திட்​டத்தை கடைப் பணி​யாளர்​கள் மூலமே செயல்​படுத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ள​தாக கூறி, சென்னை மண்​டலம் மற்​றும் திருப்​பூர், கோவை மாவட்​டங்​களை சேர்ந்த டாஸ்​மாக் பணி​யாளர்​கள் நேற்று கடைகளை அடைத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும், அவர்​கள் டாஸ்​மாக் தலை​மையகம் முன்​பும் போராட்​டத்​தில் ஈடுப்​பட்​டனர். இதுகுறித்​து, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்க மாநில செய​லா​ளர் மணி​கண்​டன் கூறிய​தாவது: இந்த திட்​டத்தை செயல்​படுத்த தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​ப​தாக கடந்த அரசு எங்​களுக்கு உறுதி அளித்​தது.

ஆனால், தற்​போது மீண்​டும் எங்​களைக் கொண்டே இந்த திட்​டத்தை செயல்​படுத்த நிர்​வாகம் தரப்​பில் இருந்து அறி​வுறுத்​தப்​பட்​டது. உயர் ​நீ​தி​மன்​றம் இந்த திட்​டத்​துக்​கென தனி​யாக பணி​யாளர்​களை நியமிக்க வழி​காட்​டு​தல் வழங்​கி​யுள்​ளது.

தற்​போது, இந்த திட்​டம் அமலில் உள்ள மாவட்​டங்​களில் இந்த மாற்​றத்தை கொண்டு வரு​வ​தாக உறுதி அளித்​தனர். அது​வும் செயல்​படுத்​த​ப்படவில்​லை.

இதுகுறித்​து, டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர் எங்​களை அழைத்து பேசி​யுள்​ளார். புதிய அரசு அமைந்​துள்​ள​தால், கால அவகாசம் கோரி​யுள்ளார்.

மேலும், இதுகுறித்து பணி​யாளர்​களுக்கு சாத​மாக நடவடிக்கை எடுப்​ப​தாக​வும், அது​வரை திட்​டத்தை நிறுத்தி வைப்​ப​தாகவும் உறுதி அளித்​தார். மேலாண் இயக்குநரின் உறு​தியை தொடர்ந்து கடையடைப்பு போ​ராட்​டத்​தை தற்​போதைக்​கு வாபஸ்​ பெற்​றுள்​ளோம்​. இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here