தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும் சிங்கப்படை போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாகவும், உடனடியாக குற்றங்களைக் கண்டறிவது கடினம் என்றும் அவர் கூறினார். தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை முதல்வர் வழங்குவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.















