குமரியில்: சொத்தின் பேரில் பண மோசடி; 6 பேர் மீது வழக்கு

0
22

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மணியன் (72) என்பவர், குமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனது நிலத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். இதற்காக மணி, மணியனுக்கு ரூ. 1 கோடியே 10 லட்சம் முன் பணமாக வழங்கினார். 19 சென்ட் நிலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகையையும் மணி கொடுத்த பின்பும், மணியன் மீதமுள்ள நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. பணத்தை கேட்டபோது மணியனும் அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மணி திருவட்டாறு போலீசில் அளித்த புகாரின் பேரில், மணியன், அவரது மனைவி சாரதாகுமாரி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here