மணவாளக்குறிச்சி அருகே, தென்னந்தோப்பில் நின்றிருந்த விவசாயி குமரேசனை, 15 வயது சிறுவன் ஒருவன் தனது தோழியுடன் அங்கு வந்தபோது கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் மேலும் இருவரை அழைத்து வந்து விவசாயியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மணவளக்குறிச்சி போலீசார் சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.















