சபரிமலை ஐயப்​பன் கோயில் வழக்கில் தீர்ப்பு ஒத்​திவைப்பு

0
15

கேரள மாநிலத்​தில் உள்ள சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்​தி​னா, எம் எம் சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்​லே, ஆர். மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

நேற்று நடை​பெற்ற 16-வது நாள் விசா​ரணை​யின்​போது, மூத்த வழக்​கறிஞர் கோபால் சுப்​ரமணி​யம் ஆஜராகி, மதத்​துக்​கும், மதப்​பிரிவுக்​கும் இடையே வேறு​பாடு உள்​ளது. மதம் சார்ந்த உரிமைகள் விவ​காரத்​தில் நீதி​மன்​றங்​களின் தலை​யீடு ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க முடி​யும் என்று வாதிட்​டார்.

மற்​றொரு மூத்த வழக்​கறிஞர் ராகேஷ் துவிவே​தி, இந்​துத் ​து​வம் வாழ்க்கை முறை என்​ப​தைக் காட்​டிலும் சமூக கட்​டமைப்​பைக் கொண்ட மத தத்​து​வங்​களை​யும் கொண்​டு, மனிதர்​களுக்​கும், சக்திக்​கும் இடையி​லான தொடர்​பை​யும், இருப்​பின் புரிதலை​யும், மனித வாழ்க்​கை​யின் அர்த்​தங்​களை​யும் தரு​வ​தாக உள்​ளது என்று வாதிட்​டார்.

மூத்த வழக்​கறிஞர் ராஜீவ் தவன், ஒரு மதத்​தில் வழக்​கங்​களைத் தொடர செய்​வதா என்​ப​தற்கு அத்​தி​யா​வசிய நடை​முறை கோட்​பாட்​டைப் பொருத்தி ஆய்வு செய்ய முடி​யாது என்று வாதிட்​டார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here