மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மத மாற்றம் செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அதன் ஊழியர் நிடா கானுக்கு முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான் கடந்த மே 7ம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (அவுரங்காபாத்) கைது செய்யப்பட்டார். அவருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தவரும் சத்ரபதி சம்பாஜி நகர் மாமன்ற உறுப்பினருமான மதின் படேல் அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் சட்ட விரோதமாக படேல் கட்டியிருந்த கட்டிடத்தை நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துத் தள்ளினர்.
இது குறித்து ஏஐஎம்ஐஎம் முன்னாள் எம்.பி.இம்தியாஸ் ஜலீல் கூறும்போது, “நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு வாரம் அவகாசம் கேட்டோம், ஆனால் மாநகராட்சி இடிப்பதில் அவசரம் காட்டுகிறது. எனினும், படேலுக்காக நாடு வியக்கும் வகையில் ஒரு வீட்டை நாங்கள் கட்டித் தருவோம்” என்றார்.















