Home தேசிய செய்திகள் டிசிஎஸ் வழக்கில் தொடர்புடைய நிடா கானுக்கு தஞ்சமளித்தவரின் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு

டிசிஎஸ் வழக்கில் தொடர்புடைய நிடா கானுக்கு தஞ்சமளித்தவரின் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு

0

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்​கில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய பெண் ஊழியர்​களுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக​வும் மத மாற்​றம் செய்ய முயன்​ற​தாக​வும் புகார் எழுந்​தது.

இந்த விவ​காரத்​தில் அதன் ஊழியர் நிடா கானுக்கு முக்​கிய பங்கு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. தலைமறை​வாக இருந்த நிடா கான் கடந்த மே 7ம் தேதி சத்​ரபதி சம்​பாஜி நகரில் (அவுரங்​கா​பாத்) கைது செய்​யப்​பட்​டார். அவருக்கு ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யைச் சேர்ந்​தவரும் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாமன்ற உறுப்​பினரு​மான மதின் படேல் அடைக்​கலம் கொடுத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்​து, சத்​ரபதி சம்​பாஜி நகரின் நரே​கான் பகு​தி​யில் சட்ட விரோதமாக படேல் கட்டியிருந்த கட்​டிடத்தை நேற்று காலை​ மாநக​ராட்சி ஊழியர்​கள் இடித்​துத் தள்​ளினர்.

இது குறித்து ஏஐஎம்​ஐஎம் முன்​னாள் எம்​.பி.இம்​தி​யாஸ் ஜலீல் கூறும்​போது, “நாங்​கள் நீதி​மன்​றத்​தில் ஒரு வாரம் அவகாசம் கேட்​டோம், ஆனால் மாநக​ராட்சி இடிப்​ப​தில் அவசரம் காட்​டு​கிறது. எனினும், படேலுக்​காக நாடு வியக்​கும் வகை​யில் ஒரு வீட்டை நாங்​கள் கட்​டித் தரு​வோம்” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version