ஐஏஎஸ் அதிகாரியின் விருப்ப ஓய்வில் முறைகேடு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

0
19

திண்​டுக்​கல், தேனி மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த ஐஏஎஸ் அதி​காரி வெங்​க​டாச்​சலத்​தின் விருப்ப ஓய்வு ஆவணங்​களை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கொடைக்​கானலைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திண்​டுக்​கல், தேனி மாவட்ட முன்​னாள் ஆட்​சி​யர் வெங்​க​டாச்​சலம்.

இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்​சி​ய​ராக இருந்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு புகார் அனுப்​பினேன்.

புகாரின்​பேரில் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டாத நிலை​யில், வெங்​க​டாச்​சலத்​துக்கு முறை​கே​டாக விருப்ப ஓய்வு வழங்​கிய அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும், சொத்து குவிப்பு புகார் தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி மீண்டும் விசா​ரித்​தார். வெங்​க​டாச்​சலம் விருப்ப ஓய்வு தொடர்​பான அசல் ஆவணங்​களை தாக்​கல் செய்ய அரசு தரப்​பில் அவகாசம் வேண்​டும் என்​றும், அந்த ஆவணங்​களை முதல்​வரிடம் அனு​மதி பெற்ற பிறகே நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​யும் என்​றும் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, ‘ஐஏஎஸ் அதி​காரிக்கு விருப்ப ஓய்வு வழங்​கிய​தில் தேவை​யான விதி​கள் பின்​பற்​றப்​பட்​ட​தா, இல்​லை​யா என்​பதை உறுதி செய்​வதற்​காகவே அந்த ஆவணங்​களை தாக்​கல் செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதனால், அந்த ஆவணங்​களை ஒரு வாரத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த வழக்​கில் அனைத்து தரப்பு வாதங்​களும் விரி​வாக கேட்​கப்​பட்​டுள்​ள​தால் தீர்ப்​பு தள்​ளி வைக்​கப்​படு​கிறது என நீதிபதி உத்​தர​விட்​டார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here