குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர். விரதமிருந்த பக்தர்கள் அம்மன் அருள் வந்து சாமி ஆடியபடி, இந்த அபிஷேகத்தை தங்கள் உடலில் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.















