பூஞ்சேரியில் தவெக எம்எல்ஏக்கள் தங்கவைப்பு: பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிப்பு

0
24

சட்​டப்​பேரவை தேர்​தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 70 எம்​எல்​ஏக்​கள், மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில், தங்​க வைக்​கப்​பட்​டுள்​ள​தால், அங்கு பாது​காப்பு பணிக்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்கப்பட்டுள்​ளனர்.

தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், நேற்று சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலைமை அலு​வல​கத்​தில் தலை​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்ற ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

பின்​னர், அங்​கிருந்து புறப்​பட்ட தவெக எம்​எல்​ஏக்​கள் 70 பேர் மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் அமைந்​துள்ள போர் பாயிண்ட் என்ற தனி​யார் நட்​சத்​திர விடு​திக்கு வருகை தந்​தனர்.

மேலும், தவெக பதவியேற்பு நிறைவுபெறும் வரை இந்த விடு​தி​யில் தங்​கு​வதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யினர் தெரி​வித்​தனர்.

தவெகவை சேர்ந்த எம்​எல்​ஏக்​கள் தங்​கி​யுள்​ள​தால் விடு​தி​யின் முகப்பு பகு​தி​யில் பாது​காப்பு பணிக்​காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here