மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் (59) என்பவர் கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














