கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் இருந்தார்.














