பாகிஸ்தான் மருத்துவமனையில் ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று

0
16

பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்’ நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே மருத்​துவ சாதனத்தை பல நோயாளி​களுக்கு பயன்​படுத்​துதல் என பல்​வேறு பாதுகாப்​பற்ற நடை​முறை​களை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது. இதுவே எச்​ஐவி பரவலுக்​கும் வழி​வகுத்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது.

தவுன்​சா​வில் 8 வயது சிறு​வன் எச்​ஐவி தொற்று உறு​தி செய்​யப்​பட்ட சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தான். இறுதி நாட்​களில், அவன் அனுப​வித்த தீவிர துன்​பத்தை சிறுவனின் தாயார் நினைவு கூர்ந்​தார். சிறு​வனுக்கு எச்ஐவி இருப்​பது கண்​டறியப்​பட்ட சிறிது காலத்​திலேயே, அவன் சகோ​தரி அஸ்​மாவுக்​கும் தொற்று இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த மருத்​து​வ​மனை​யில் வழக்​க​மான சிகிச்​சை​யின் போது செலுத்​தப்​பட்ட அசுத்​த​மான ஊசிகள் மூலம் இரு குழந்​தைகளுக்​கும் வைரஸ் தொற்று ஏற்​பட்​ட​தாக அவர்களது குடும்​பத்​தினர் நம்​பு​கின்​றனர்.2024-ம் ஆண்டின் பிற்​பகு​தி​யில், உள்​ளூர் மருத்​து​வர் குல் கைஸ் ரானி தனது மருத்​து​வ​மனைக்கு வரும் குழந்தைகளிடையே எச்​ஐவி பாதிப்​பு​கள் வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​ததை கவனித்​த​போது இந்த தொற்​றுப் பரவல் முதன்​முதலில் வெளிச்​சத்​துக்கு வந்​தது.

பிபிசி நடத்​திய புல​னாய்​வில் 2024 நவம்​பர் முதல் 2025 அக்டோபர் வரையி​லான கால​கட்​டத்​தில், தவுன்​சா​வில் குறைந்​தது 331 குழந்​தைகளுக்கு எச்​ஐவி தொற்று இருப்பது கண்​டறியப்​பட்​டது. இந்​தத் தொற்​றுகளில் பல பாது​காப்​பற்ற ஊசி போடும் முறை​களு​டன் தொடர்​புடைய​தாக இருக்​கலாம் என்று சான்​றுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தங்​கள் மீதான புகார்களை மருத்​து​வ​மனை அதி​காரி​கள் மறுத்​துள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here